இந்தியாவில் போடப்படும் கோவிஷில்டு தடுப்பூசியின் விலை 2 டோஸ் ஆயிரம் மட்டுமே என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. சில நாடுகளில் கொரோனா தடுப்பூசி இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளது. தற்போது தடுப்பூசி ஒரு சில நாடுகளில் மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
இந்நிலையில் இந்தியாவில் போடப்படும் கோவிஷில்டு தடுப்பூசியின் விலை 2 டோஸ் ஆயிரம் மட்டுமே என தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற தடுப்பு மருந்துகளைக் காட்டிலும் இந்த தடுப்பூசியின் செலவு மிகவும் குறைவானது என்று கூறப்படுகிறது. மேலும் இந்த தடுப்பூசி பரிசோதனையில் 70 முதல் 90 சதவீதம் வரை பலன் அளித்துள்ளது. அதனால் மக்கள் இதனை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.