Categories
தேசிய செய்திகள்

2 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட முதியவர்கள்….. 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…..!!

மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள சோர்கான் பகுதியில் மாதோஸ்ரீ என்ற முதியோர் இல்லம் செயல்பட்டு வருகிறது. இந்த இல்லத்தில் தங்கியுள்ள 2 முதியவர்களுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து இவர்களுக்கு பரிசோதனை நடைபெற்றது. அந்த பரிசோதனையில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அந்த இல்லத்தில் தங்கியுள்ள மற்ற 119 முதியவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. மேலும் முதியோர் இல்லத்தில் வேலை பார்த்து வரும் 5 ஊழியர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்பிறகு ஊழியர்களின் உறவினர்களுக்கும் பரிசோதனை நடைபெற்றது.

இதில் ஒன்றரை வயது குழந்தை மற்றும் கர்ப்பிணி பெண் ஒருவருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து அனைவரையும் உடனடியாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 55 முதியவர்களும் 2 டோஸ் தடுப்பூசியும் முழுமையாக செலுத்தி கொண்டவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |