தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான தேர்வு ஆகஸ்ட் 6-ஆம் தேதி முதல் 19ம் தேதி வரை நடைபெற உள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. இதுகுறித்து அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண்களில் திருப்பதி இல்லாத மாணவர்களுக்கு விருப்பத்தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி அந்த தேர்வு ஆகஸ்ட-6 தேதி முதல் 19ம் தேதி வரை நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளது.
இந்நிலையில் துணைத் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் தேர்வு எழுத இன்று ஹால் டிக்கெட் வழங்கப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது .இன்று காலை 11 மணி முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் ஹால் டிக்கெட்டை மாணவர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். துணைதேர்வில் பெறும் மதிப்பெண்களே பிளஸ் டூ தேர்வில் இறுதியான மதிப்பெண்கள் என்றும் தெரிவித்துள்ளது.