இங்கிலாந்தில் போதை பொருளுக்காக சண்டையிட்ட பெண்ணை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இங்கிலாந்தில் போனிக்ஸ் என்ற பெண்மணி வசித்து வந்தார். இந்நிலையில் இவரும் கரீக்கா கொனிடா என்ற பெண்மணியும் அங்கிருக்கும் ஹோட்டலில் தங்கியுள்ளனர். அப்போது இருவருக்குமிடையே போதை பொருட்களுக்கு சண்டை வந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த கொனிடா, போனிக்ஸ்ஸை கொலை செய்தார். மேலும் அவரது உடலை 2 துண்டுகளாக வெட்டி தனித்தனியாக பிரித்து அதனை 2 சூட்கேஸ்களில் வைத்தார். இதனையடுத்து அவர் அந்த சூட்கேசை இங்கிலாந்திலிருக்கும் குவாரியில் வைத்து விட்டு அதனை அடிக்கடி காரில் சென்று பார்த்திருக்கிறார்.
இந்த நிலையில் வழக்கம்போல் இவரும், மகேஷ் என்கின்ற வாலிபரும் குடோனிற்கு காரில் வேகமாக செல்வதை கவனித்த ஒருவர் காவல் துறையினரிடம் தகவல் கொடுத்துள்ளனர். இத்தகவலின் அடிப்படையில் அவர்களைப் பின் தொடர்ந்த காவல்துறையினர் அவர்கள் குடோன் அருகே நிற்பதை கவனித்தனர். அதன்பின் காவல்துறையினர் இருவரிடமும் விசாரித்தபோது உண்மை வெளியானது. இதனையடுத்து கொனிடாவை கைது செய்த காவல்துறையினர் காணொளியின் மூலம் நீதிபதி முன் ஆஜர்படுத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து நீதிபதி தண்டனையை மே 4 ஆம் தேதி ஒத்திவைத்தார்.