தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தேர்தல் ஆணையமும் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. ஒவ்வொரு கட்சியிலும் கூட்டணி குழப்பமும், தொகுதி பங்கிடுவதில் இழுபறியும் நீடித்து வருகிறது. இதனால் தேர்தல் களம் பரபரப்பாக உள்ளது. இதையடுத்து ஒவ்வொரு கட்சியிலும் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் அதிமுக கூட்டணியில் ஜி.கே வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திருவிக நகர், பட்டுக்கோட்டை, ஈரோடு, லால்குடி, தூத்துக்குடி, கிள்ளியூர் ஆகிய தொகுதிகளில் தாமாக இரட்டை இல்லை சின்னத்தில் போட்டியிடுகிறது ,ஈரோடு கிழக்கு, கிள்ளியூர் ஆகிய தொகுதிகளில் காங்கிரசுடன் நேரடியாக தாமாக மோதுகிறது.