இரண்டு நடிகைகளுக்கு திருமணம் நடைபெற உள்ளது.
தமிழில் விஜய் நடிப்பில் வெளியான பைரவா திரைப்படத்தில் நடித்தவர் அபர்ணா வினோத். இவர் இத்திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷுக்கு தோழியாக நடித்திருந்தார். இந்த நிலையில் இவருக்கும் கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த ரினில் ராஜ் என்பவருக்கும் திருமணம் முடிவாகி இருப்பதாகவும் நிச்சயதார்த்தம் முடிந்திருப்பதாகவும் அவர் இணையத்தில் தெரிவித்து இருக்கின்றார்.
இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது, உன்னை சந்தித்த நாள் தான் எல்லாவற்றுக்குமான தொடக்கம் என பதிவிட்டதோடு உனக்காக பொறந்தேனே எனதழகா பிரியாம இருப்பேனே பகல் இரவா என பதிவிட்டு இருக்கின்றார். தற்போது இவருக்கு திரையுலகினரும் ரசிகர்களும் வாழ்த்துக் கூறி வருகின்றார்கள். இது போலவே பிரபல நடிகை கியாரா அத்வானிக்கு திருமணம் நடைபெற இருக்கின்றது. இவரும் நடிகர் சித்தார்த் மல்கோத்ராவும் சென்ற சில வருடங்களாக காதலித்து வந்த நிலையில் அடுத்த டிசம்பர் மாதம் இவர்கள் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு இருப்பதாக செய்தி வெளியாகியிருக்கின்றது.