Categories
மாநில செய்திகள்

2 நாடுகளுக்கு நேரடி விமான சேவை…. முதல்வர் ஸ்டாலின் மத்திய மந்திரிக்கு கடிதம்….!!!!

தமிழர்கள் மற்றும் தமிழகத்திலிருந்து சென்ற பிற மாநில விமான பயணிகள் கொரோனா தொற்று பரவல் அதிகமாக இருந்த காலகட்டத்தில் சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் இருந்து இந்தியாவிற்கு வந்தனர். தற்போது கொரோனா தொற்று குறைந்துள்ள நிலையில் அவர்கள் திரும்பி செல்வதற்கான நேரடி விமான சேவை இல்லாததால் அவர்கள் பெரிய சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

மேலும் அந்த நாடுகளில் வாழும் தமிழர்கள் தமிழ்நாட்டிற்கு வருவதற்கு கடினமான சூழ்நிலைகளை எதிர் கொள்கின்றனர். மேலும் அவர்கள் மாற்றுப்பாதையில் சென்றால் துபாய், தோகா, கொழும்பு வழியாக செல்ல வேண்டியுள்ளது. அதனால் நேரமும், பணமும் வீணாகிறது.

சிங்கப்பூர் மற்றும் மலேசியா நாடுகளுடன் தற்காலிக போக்குவரத்து ஒப்பந்தங்களை மத்திய அரசு செய்யாததால் தான் இந்த நிலை உருவாகியுள்ளது. எனவே தற்காலிக விமானப் போக்குவரத்து சேவையை வழங்கி அந்த நாடுகளிலுள்ள புலம்பெயர்ந்த தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |