Categories
அரசியல்

2 நாட்களில் புயல்?…. கனமழை வெளுத்து வாங்கப்போகுது….. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை…..!!!

வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக வரும் ஏழாம் தேதி இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாகவும் இதனால் பருவமழை மேலும் தீவிரமடைய வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு,கேரளா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. ஏற்கனவே அதனால் பல்வேறு மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும் நிலையில் வருகின்ற ஆகஸ்ட் 7ஆம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் அடுத்த இரண்டு நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது.

Categories

Tech |