Categories
மாநில செய்திகள்

2 நாட்களில், மக்களே அலர்ட்… புதிய பரபரப்பு அறிவிப்பு..!!!

தற்போது பரவி வரும் கொரோனா வைரஸ் இரண்டு நாட்களில் நான்கு பேருக்கு பரவும் அளவுக்கு வீரியம் மிக்கது என பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகிறார்கள்.

ஆனால் கடந்த 2 வாரமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன் காரணமாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி ஏப்ரல் 10 முதல் புதிய கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் மாநிலம் முழுவதும் கண்காணிப்பு பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது பரவும் கொரோனா வைரஸ் தொற்று வீரியம் அதிகமாக இருப்பதாக கீழ்ப்பாக்கம் மருத்துவமனை முதல்வர் பரபரப்பு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். முன்னர் வந்த கொரோனா ஒருவரிடமிருந்து அடுத்தவரிடம் பரவ நான்கு நாட்கள் எடுக்கும் என்றால் இப்போது இரண்டு நாட்களில் 4 பேருக்கு பரவும் அளவுக்கு வீரியமாக உள்ளது. மேலும் நோய் தொற்று நேரடியாக நுரையீரல் பாதிப்பால் இறப்பும் அதிகரிக்கிறது என கூறியுள்ளார். இது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |