Categories
மாநில செய்திகள்

2 நாட்களில் மட்டும் இவ்வளவு கோடியா?… தீபாவளியை முன்னிட்டு களைக்கட்டிய மது விற்பனை….!!!!

தமிழகத்தில் பண்டிகைக்காலங்களில் டாஸ்மாக் கடைகளில் மதுவிற்பனை அதிகரிப்பது வழக்கம் ஆகும். இவற்றில் இதர பண்டிகைகளைவிட தீபாவளி பண்டிகைக்கு இதன் விற்பனையானது பன்மடங்கு அதிகரித்து வருகிறது. இந்த வருடம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்ற 2 நாள்களில் மட்டும் தமிழகம் முழுதும் ரூபாய்.464.21 கோடிக்கு மது விற்பனையாகி இருக்கிறது.

சென்னையில் மட்டும் 22,23ஆம் தேதிகளில் டாஸ்மாக்கில் ரூபாய்.90.16 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளது. அதே நேரம் நேற்று மதுரை மண்டலம் ரூபாய்.55.78 கோடி, சேலம் ரூ.52.36 கோடி, சென்னை மண்டலம் ரூபாய்.51.52 கோடி, திருச்சி மண்டலம் ரூபாய்.50.66 கோடி, கோவை மண்டலம் ரூ.48.47 கோடிக்கும் மது விற்பனையாகி இருக்கிறது. அதேசமயம் சென்ற வருடம் தீபாவளியன்று ரூபாய்.431 கோடிக்கு மதுவிற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |