திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். மாண்டஸ் புயல் காரணமாக வனத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் சுற்றுலா இடங்களுக்கு செல்ல 2 நாட்களுக்கு வனத்துறையினர் தடை விதித்தனர். பின்னர் புயல் கரையை கடந்ததால் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
விடுமுறை தினமான நேற்று ஏராளமான பக்தர்கள் கொடைக்கானலுக்கு படை எடுத்தனர். இந்நிலையில் வட்டக்கானல் அருவி, பிரயண்ட் பூங்கா, மோயர் பாயிண்ட் ,பில்லர் ராக்ஸ் உள்ளிட்ட பல்வேறு இடங்களை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்து செல்பி எடுத்து மகிழ்ந்தனர். இதனையடுத்து சுற்றுலா பயணிகள் நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.