Categories
தேசிய செய்திகள்

2 நாட்களுக்கு வங்கிகள் இயங்காது?… மக்களே ரெடியா…!!!

பொதுத்துறை வங்கிகள் தனியார் மயமாக்குவதை கண்டித்து வருகின்ற மார்ச் 15 மற்றும் 16 ஆம் தேதி வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

நாட்டின் பொதுத்துறை வங்கிகளில் வாராக் கடன் நிலுவை தொகை அதிகரித்து வருவதால் பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்க முடிவு செய்திருப்பதாக நடப்பு ஆண்டின் பட்ஜெட் கூட்டத்தொடரில் மத்திய நிதி அமைச்சர் அறிவித்தார். அதன் மூலம் பொதுத்துறை வங்கிகளில் அரசின் பங்குகள் தனியாரிடம் விற்கப்பட்ட அதன் மூலம் நிலுவை தொகையை ஈடுகட்ட அரசு முடிவு செய்துள்ளது. அதன் முதல் கட்டமாக 4 பொதுத்துறை வங்கிகளில் பங்கு விலைகள் மேற்கொள்ள அரசு முடிவெடுத்துள்ளது.

இந்நிலையில் பொதுத்துறை வங்கிகள் தனியார் மயமாக்குவதை கண்டித்து வருகின்ற மார்ச் 15,16 ஆகிய தேதிகளில் வங்கி ஊழியர்கள் அனைவரும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். அதனால் வங்கிகள் இரண்டு நாட்கள் செயல்படாமல் போகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி இந்த மாதம் 9 நாட்கள் வங்கி விடுமுறை அளிக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதனால் மக்கள் வங்கி தேவைகளை விரைந்து முடித்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |