வைகை, பல்லவன் எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகள் பராமரிப்பு பணி காரணமாக மாற்றம் செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுரை-சென்னை எழும்பூர் வைகை அதிவேக எக்ஸ்பிரஸ் 12636 ஜனவரி 5 மற்றும் 19-ந்தேதி விழுப்புரம்-எழும்பூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படும். எழும்பூர்-காரைக்குடி பல்லவன் எக்ஸ்பிரஸ் 12605 ஜனவரி 5 மற்றும் 19-ந்தேதிகளில் எழும்பூர்-விழுப்புரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு, விழுப்புரத்தில் இருந்து மாலை 6.10 மணிக்கு புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Categories