அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கொத்தமங்கலம் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடுப்பதினார் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் வளிமண்டல சுழற்சி காரணமாக கடந்த 2 நாட்களாக கனமழை பெய்துள்ளது. இதனால் குடியிருப்பு பகுதிகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளது. இந்நிலையில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும் நூற்றுக்கணக்கான ஏக்கரில் அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா நெற்பயிர்கள் நீரில் மூழ்கி நாசமானது. இதனால் விவசாயிகள் மிகவும் வருத்தத்தில் உள்ளனர்.