தமிழகத்தின் தலைநகர் சென்னையில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில், பிற மாவட்டங்களில் இதன் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருவது அரசுக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது. இதனை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகங்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதிகமுள்ள பகுதிகளில் முழு கட்டுப்பாடு, தளர்வின்றி பொதுமுடக்கம் போன்ற பல்வேறு விஷயங்களை முன்னெடுத்து வருகிறார்கள்.
அந்த வரிசையில் கடலூர் மாவட்டமும் இணைந்துள்ளது. கடலூரில் சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரண்டு நாட்கள் முழு கடையடைப்பு வணிகர் சங்க பேரவை அறிவித்துள்ளது. கொரோனா பரவலை தடுக்க தாமாகவே முன்வந்து கடைகளை அடைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் வீட்டிற்கு தேவையான பொருட்களை வெள்ளிக்கிழமைகள் வாங்கி வைத்துக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.