ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இரண்டு நாட்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மும்பை, நாக்பூர், கொச்சி, திருவனந்தபுரம், ஜம்மு, ஸ்ரீநகர் உள்ளிட்ட நகரங்கள் மற்றும் சில மாநிலங்களில் இன்றும், நாளையும் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கபடுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. சென்னை, ஆமதாபாத், பெங்களூரு ஹைதராபாத், டெல்லி உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் நாளை வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.