நாடு முழுவதும் 2 நாட்கள் வங்கிகள் வேலைநிறுத்தம் நடைபெறும் என வங்கி ஊழியர்கள் சங்கம் அதிரடியாக அறிவித்துள்ளது.
நாட்டின் பொதுத்துறை வங்கிகளில் வாராக் கடன் நிலுவை தொகை அதிகரித்து வருவதால் பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்க முடிவு செய்திருப்பதாக நடப்பு ஆண்டின் பட்ஜெட் கூட்டத்தொடரில் மத்திய நிதி அமைச்சர் அறிவித்தார். அதன் மூலம் பொதுத்துறை வங்கிகளில் அரசின் பங்குகள் தனியாரிடம் விற்கப்பட்ட அதன் மூலம் நிலுவை தொகையை ஈடுகட்ட அரசு முடிவு செய்துள்ளது.
அதன் முதல் கட்டமாக 4 பொதுத்துறை வங்கிகளில் பங்கு விலைகள் மேற்கொள்ள அரசு முடிவெடுத்துள்ளது. இந்நிலையில் பொதுத்துறை வங்கிகள் தனியார் மயமாக்குவதை கண்டித்து வருகின்ற மார்ச் 15,16 ஆகிய தேதிகளில் வங்கி ஊழியர்கள் அனைவரும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.
மேலும் எல்ஐசி பங்குகள் விற்பனை, காப்பீட்டு துறையில் 74 சதவீத நேரடி அன்னிய முதலீட்டுக்கு அனுமதி, 2 பொதுத்துறை வங்கிகள் தனியார் மயமாக்கப்படும் என்ற அறிவிப்புக்கு எதிராக போராட்டம் நடைபெற உள்ளது. இரண்டு நாட்கள் வங்கிகள் இயங்காது என்பதால் ஏடிஎம்மில் பணம் கட்டுப்பாடு ஏற்பட அதிகம் வாய்ப்பு உள்ளது.