வருகின்ற அக்டோபர் 25ஆம் தேதி சூரிய கிரகண நிகழ்வு அரகேர உள்ளது.அதனைப் போலவே நவம்பர் எட்டாம் தேதி சந்திர கிரகணம் நடைபெறுகிறது.இதனை முன்னிட்டு இரண்டு நாட்களும் 12 மணி நேரம் வரை திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் திருக்கோவில் மூடப்படும் என தேவஸ்தானம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதிலும் குறிப்பாக அக்டோபர் 25ஆம் தேதி மாலை 5.11 மணி முதல் 6.27 மணி வரை சூரிய கிரகணம் நிகழ உள்ளதால் அன்றைய தினம் காலை 8 மணிக்கு கோவில் மூடப்பட்டு விடும். மீண்டும் சுத்தி பூஜைகளுக்கு இரவு 7.30 மணிக்கு தான் திறக்கப்படும்.அதனைப் போலவே சந்திர கிரகணம் நாளான நவம்பர் எட்டாம் தேதி பிற்பகல் 2.39 மணி முதல் 6.19 மணி வரை கிரகணம் நடைபெறுவதால், அன்றைய தினம் காலை 8.40 மணியளவில் இருந்து இரவு ஏழு 20 மணி வரை திருக்கோவில் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.