Categories
தேசிய செய்திகள்

2 நாட்கள் 144 தடை உத்தரவு…. சற்றுமுன் வெளியான அறிவிப்பு….!!!!

மும்பையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் தொடர்ந்து பரவி வந்த கொரோனா தொற்று தற்போது பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இதனால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக தங்களின் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிக் கொண்டு உள்ளனர். இந்நிலையில் தற்போது உலக நாடுகளில் உருமாறிய ஒமைக்ரேன் பரவி வருகிறது. அந்த வகையில் இந்தியாவில் தற்போது வரை 32 பேருக்கு தொற்று பரவியுள்ளது.

நேற்று ஒரு நாளில் மட்டும் மகாராஷ்டிரா மாநிலத்தில் 7 பேருக்கு ஒமைக்ரேன் பாதிப்பு ஏற்பட்டது.  ஒமைக்ரேன் தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில் மும்பையில் இரண்டு நாட்கள் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் இதுவரை 17 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் அவற்றை கட்டுப்படுத்த வேண்டும் என்பதற்காக இன்றும் நாளையும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |