உக்ரைன் ரஷ்யாவிற்கு இடையே போர் நடந்து வருவதால் தமிழக மாணவி தாயகம் திரும்பியுள்ளார்.
ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே கடுமையான போர் நடந்து வருவதால் அங்கு பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இதனால் அங்கு படிக்கும் தமிழக மாணவர்களை மீட்க ஆப்ரேஷன் கங்கா என்ற திட்டத்தை அரசு செயல்படுத்தியது. இதன்படி தமிழக மாணவர்கள் பலர் தாயகம் திரும்பியுள்ளனர். இந்நிலையில் நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்த கேத்தி பாலாடா பகுதியில் பாபு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஆர்த்தி என்ற மகள் இருக்கிறார். இவர் உக்ரைன் நாட்டில் மருத்துவ படிப்பு படித்து வருகிறார். இவர் போர் நடைபெற்று தாயகம் திரும்பியுள்ளார்.
இந்த மாணவி இதுபற்றி பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது, உக்ரைனில் நான் 5-ம் ஆண்டு மருத்துவப் படிப்பு படித்து வருவதாகவும், அங்கு கடும் போர் நடைபெற்றதால் நகல் உயிருக்கு பயந்து பதுங்கு குழிகளில் தங்கியிருந்ததாகவும் கூறினார். நாங்கள் உணவின்றி மிகவும் அவதிப்பட்டோம் எனவும் ,அங்கிருந்து ரயில் மூலமாக ஹங்கேரி எல்லைக்கு வந்து சொந்த ஊருக்கு திரும்பினோம் என்றும் மாணவி கூறினார். மேலும் ஆர்த்தி உக்ரைனில் தான் வளர்த்த 2 நாய்களையும் உடன் அழைத்து வந்துள்ளார். இந்த மாணவி உக்ரைனில் தவிக்கும் மற்ற தமிழக மாணவர்களையும் மீட்க வேண்டுமெனவும், மருத்துவ படிப்பை தொடர உதவ வேண்டுமெனவும் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.