உத்தரபிரதேச மாநிலத்தில் உரத் தட்டுப்பாடு என்பது கடமையாக நிலவி வருகிறது. இதனால் உரக் கடைகளில் விவசாயிகள் பல மணி நேரம் காத்திருந்து உரத்தை வாங்கி செல்கின்றனர். இந்நிலையில் லலித்பூர் மாவட்டத்தை சேர்ந்த போகிலால் பால் என்ற விவசாயி ஜக்லான் என்ற உர கடையில் உரம் வாங்குவதற்கு நேற்று முன்தினம் சென்றார். அங்கு நீண்ட வரிசை இருந்ததால் அவரால் நேற்று முன்தினம் உரம் வாங்க முடியவில்லை.
பிறகு கடைக்கு வெளியிலேயே தூங்கி நேற்று மீண்டும் வரிசையில் உரத்தை வாங்குவதற்கு நின்று கொண்டிருந்தார். அப்போது திடீரென்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு அங்கேயே மயங்கி விழுந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.