Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

2 நாளில் திருமணம்…. பட்டப் பகலில் வீடு புகுந்து கைவரிசை…. 70 சவரன் தங்க நகைகள் கொள்ளை…. பரிதவிக்கும் பெண் வீட்டார்….!!!!

வீடு புகுந்து 70 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள ஆர்எம்எஸ் காலனி அசோக் நகர் பகுதியில் நாகலட்சுமி என்பவர் வசித்து வருகிறார். இவர் ரயில்வே ஊழியர். இவருடைய தங்கை மகளுக்கு வருகிற 7-ம் தேதி திருமணம் நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக திருமணத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக நாகலட்சுமி மற்றும் அவருடைய தாயார் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்று இருந்தனர். இவர்கள் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த நாகலட்சுமி வீட்டிற்குள் சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்ட அதிலிருந்து 70 பவுன் தங்க நகைகள் மற்றும் 1 லட்சம் ரொக்கம் ஆகியவை திருடப்பட்டு இருந்தது. இதுகுறித்து நாகலட்சுமி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மற்றும் தடவியல் நிபுணர்கள் அங்கு பதிவான தடயங்களை சேகரித்தனர்.

இந்நிலையில் நாகலட்சுமி நாங்கள் ஆட்டோவில் வரும்போது நாங்கள் பேசுவதை கேட்டுக் கொண்டிருந்த ஆட்டோ ஓட்டுனர் தான் நகைகளை திருடி இருக்க வேண்டும் என்று சந்தேகப்படுவதாக கூறியுள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பட்டப்பகலில் வீடு புகுந்து நகைகளை திருடப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |