இந்தியாவில் புதிய தொழிலாளர் சட்டத் திருத்தத்தை ஜூலை 1 முதல் அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன்படி தற்போது நடைமுறையில் உள்ள எட்டு மணி நேர வேலை என்பது ஒரு நாளில் 12 மணி நேரம் வரை என்றும், வாரத்தில் மூன்று நாட்கள் விடுமுறை அளிக்க வேண்டும் என்றும் மாற்றம் பெறுகிறது.
ஆனால் மொத்த வேலை நேரம் வாரத்தில் 48 மணி நேரத்தில் மீறக் கூடாது என்பதில் மாற்றம் இல்லை. இதன்படி ஒரு ஊழியர் பணியில் இருந்து ராஜினாமா செய்தாலோ, நீக்கப்பட்டாலோஅல்லது பணி ஓய்வு பெற்றாலோ அவருக்கான அனைத்து பலன்களும் இரண்டு நாட்களில் கிடைக்கும் படி செய்யப்படும். வாரத்திற்கு நான்கு நாட்கள் வேலை, பணி நேரம் 8 இல் இருந்து 12 மணி நேரமாக உயர்வு, பி எப் அதிகரிப்பு போன்றவை. இதற்கு தமிழக அரசு என்னும் அனுமதி அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.