இந்தியாவின் பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி வருகிற 31-ஆம் தேதிக்குள் கேஒய்சி சரிபார்ப்பை முடிக்க வேண்டும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது ரிசர்வ் வங்கியின் அறிவிப்புப்படி எல்லா வங்கிகளின் வாடிக்கையாளர்களும் வருகிற மார்ச் 31-ஆம் தேதிக்குள் கேஒய்சி சரிபார்ப்பை முடிக்க வேண்டும். ஆனால் வாடிக்கையாளர்களின் வசதிக்காக ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பஞ்சாப் நேஷனல் வங்கியில் வாடிக்கையாளர்கள் வருகிற புதன் கிழமைக்குள் கேஒய்சி சரிபார்ப்பை முடிக்காவிட்டால், அவர்களின் வங்கி கணக்குகள் முடக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
இதனையடுத்து வங்கி கணக்கு முடக்கப்பட்டால் வாடிக்கையாளர்களால் பணத்தை எடுக்க முடியாது என்றும், மற்ற வங்கிகளின் சேவையைப் பெற முடியாது என்றும் கூறியுள்ளது. அதன்பிறகு கேஒய்சி சரிபார்ப்பை வாடிக்கையாளர்கள் பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு சென்று சரி பார்த்துக் கொள்வதோடு ஆன்லைன் சென்டருக்கும் சென்று பஞ்சாப் நேஷனல் வங்கியின் இணையதள பக்கத்திற்குள் கேஒய்சி சரி பார்ப்பை முடித்துக் கொள்ளலாம். மேலும் கேஒய்சி சரிபார்ப்பை முடித்து தருவதாக பொதுமக்களிடம் கூறி வங்கி கணக்கு எண், ஆதார் கார்டு, மற்றும் பான் கார்டு விவரங்களை சில மோசடி கும்பல்கள் கேட்டு வருகிறார்கள். இந்த மோசடி கும்பலிடம் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.