Categories
மாநில செய்திகள்

2 நாள் சம்பளம் கிடையாது…. போக்குவரத்து ஊழியர்களுக்கு ஷாக் நியூஸ்…. அரசு கிடுக்கிப்பிடி….!!!!

பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களும் அடுத்த மாதம் 2 நாள் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்று சென்னை மாநகர பேருந்து போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியுள்ளனர். மத்திய அரசை கண்டித்து கடந்த 28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் அரசு அதிகாரிகள் அனைவரும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்தப் போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பளம் கிடையாது என்று அரசு உத்தரவிட்ட போதிலும், தொழிற் சங்கத்தினர் அனைவரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன்படி சென்னையில் முதல் நாள் வேலை நிறுத்தத்தில் 90 சதவீதம் பேரும், இரண்டாவது நாள் வேலை நிறுத்தத்தில் 26 சதவீதம் பேரும் பங்கேற்றனர். இந்த இரண்டு நாட்களில் பணிக்கு வராத அவர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். இந்த அறிவிப்பு போக்குவரத்து ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |