Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

2 நாள் வேலை நிறுத்தம்…. வங்கிகள் செயல்படவில்லை…. ஆனால் பொள்ளாச்சியில் 100% பஸ்கள் இயக்கம்….!!

இரண்டு நாளாக தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தம் போராட்டம் நடத்தியும் பொள்ளாச்சியில் 100% அரசு பேருந்துகள் இயங்கி வந்துள்ளன.

தமிழகம் முழுவதும் தொழிற்சங்கங்கள் சார்பில் இரண்டு நாள்(27,28-ம் தேதி ) வேலைநிறுத்தப் போராட்டம் நடைப்பெற்றது. ஆனாலும் பொள்ளாச்சியில் அரசு, தனியார் பேருந்துகள், கார்கள், ஆட்டோக்கள், வழக்கம் போல் இயங்கின. வேலைநிறுத்த போராட்டம் காரணமாக பேருந்தில் பயணம் செய்வோர் குறைவாகவே இருந்தனர். இதனால் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டும் பயணிகள் இல்லாமல் பொள்ளாச்சி பேருந்து நிலையம் வெறிச்சோடி காணப்பட்டுள்ளது.

மேலும் பொள்ளாச்சியில் இருந்து கேரளாவுக்கு இரண்டாவது நாளாக பேருந்துகள் இயக்கவில்லை. ஆனால் தமிழகம் to கேரளா எல்லை வரை டவுன் பேருந்துகள் இயங்கி வந்தன. இதுதொடர்பாக அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது, முதல் நாள் வேலை நிறுத்தம் என்பதால் போதிய அளவு ஓட்டுனர், கண்டக்டர், பணிக்கு வரவில்லை. அதனால் 80 சதவீத பேருந்துகள் ஒடாமல் இருந்தது.

ஆனால் இரண்டாவது நாள் அனைவரும் பணிக்கு வந்ததால் கோவை, திருப்பூர் உட்பட அனைத்து இடங்களுக்கும் பொள்ளாச்சியில் இருந்து 100 சதவீத அரசு பேருந்துகள் செயல்பட்டன என்று தெரிவித்தனர். மேலும் வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக இரண்டாவது நாளும் வங்கிகள் செயல்படாததால் பணம் பரிமாற்றம், பணவர்த்தனை முடங்கியுள்ளது.

மேலும் கோட்டூர், ஆனைமலை, கிணத்துக்கடவு, நெகமம், பொள்ளாச்சி ஆகிய பகுதிகளில் இரண்டு நாளாக வங்கிகள் செயல்படாததால் ரூபாய் 50 கோடி வரை வர்த்தகம் பாதித்துள்ளது. இதை போன்று தபால் நிலையமும் இயங்காததால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்பட்டனர்.

Categories

Tech |