Categories
சினிமா

2 படங்களில் இருந்து நடிகை பவித்ரா லோகேஷ் நீக்கம்… இதுதான் காரணமா?…. வெளியான தகவல்….!!!

கர்நாடக மாநில மைசூருவை சேர்ந்த பவித்ரா லோகேஷ் என்பவர் திரைப்பட நடிகை ஆவார். இவர் தெலுங்கு, கன்னடம், தமிழ் மொழிபடங்களில் நடித்துள்ளார். நடிகை பவித்ரா ஏற்கனவே 2 முறை திருமணமாகி விவாகரத்து பெற்றவர். அதனை போல தெலுங்கு திரைப்படம் நடிகர் நரேஷ் 2 பெண்களை திருமணம் செய்து விவாகரத்து ஆனவர். அவர் 3 வதாக ரம்யா ரகுபதி என்பவரை திருமணம் செய்திருந்தார். தற்போது அவரையும் விவாகரத்து செய்ய விண்ணப்பித்துள்ளார். இந்நிலையில் பவித்ர லோகேஷ் முதல் கணவரை விட்டு பிரிந்து நடிகர் நரேசை ரகசிய திருமணம் செய்து கொண்டு ஒன்றாக வசித்து வருவதாக நரேசின் மனைவி ரம்யா ரகுபதி குற்றம் சாட்டியுள்ளார்

இதனை இருவரும் மறுத்த நிலையில், மைசூரில் உள்ள ஓட்டலில் இருவரும் தங்கி இருந்தபோது ரம்யாவிடம் வசமாக சிக்கிக்கொண்டார். இருவரையும் ரம்யா ரகுபதி செருப்பால் அடிக்க பாய்ந்தார். அதன் பிறகு அவரை போலீசார் சமாதானம் படுத்தினர். இந்த விவகாரம் நாளுக்கு நாள் பூதாகரமாக வெடித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகை பவித்ரா லோகேஷ் நடிக்க இருந்த 2 தெலுங்கு திரைப்படங்களில் இருந்து அவர் நீக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. அதாவது தெலுங்கு பட உலகின் முன்னணி இளைஞர்களின் படங்களில் அம்மா வேடத்திற்கு நடிகை பவித்ரா லோகேஷ் நடிகை பவித்ரா லோகேஷ் படக்குழுவினர் தேர்வு செய்தனர். தற்போது அவரை அந்த படங்களில் நீக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது.

Categories

Tech |