தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனராக வலம் வரக்கூடிய வெற்றிமாறன் இப்போது சூரி கதாநாயகனாக நடிக்கும் “விடுதலை” திரைப்படத்தை இயக்கி வருகிறார். எழுத்தாளர் ஜெய மோகனின் துணைவன் என்ற சிறுகதையை மையமாக வைத்து இந்த படம் உருவாகி வருகிறது. இவற்றில் சூரிக்கு ஜோடியாக பவானிஸ்ரீ நடிக்கிறார். அத்துடன் நடிகர் விஜய்சேதுபதி இந்த படத்தின் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். இளையராஜா இசையமைக்கும் இத்திரைப்படத்தை ஆர்.எஸ் இன்போடெயின்மென்ட் சார்பாக எல்ரெட் குமார் தயாரிக்கிறார்.
சென்ற வருடம் வெளியாகிய இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. விடுதலை திரைப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது. இந்த நிலையில் விடுதலை படத்தின் புது அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த வகையில் இப்படம் 2 பாகங்களாக தயாராவதாக தயாரிப்பு தரப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
விடுதலை முதல் பாகத்தின் படப் பிடிப்பு முழுமையாக முடிந்த சூழ்நிலையில், இறுதிக் கட்ட பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. விடுதலை 2ஆம் பாகத்தில் இன்னும் சில காட்சிகள் மட்டுமே படமாக்கப்பட வேண்டி இருப்பதாகவும், இப்போது சிறுமலை மற்றும் கொடைக் கானலில் 2ஆம் பாகத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி கொடைக்கானலில் படத்தின் ஆக்ஷன் காட்சியை படமாக்குவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. பல்கேரியாவிலிருந்து தமிழகம் வந்திருக்கும் ஸ்டண்ட் டீம் பிரபல ஸ்டண்ட் இயக்குனர் பீட்டர்ஹெய்ன் தலைமையில் இந்த ஆக்ஷன் காட்சியை அமைக்கின்றனர். விடுதலை திரைப்படத்தின் அடுத்தடுத்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.