பான்கார்டை ஆதாருடன் இணைப்பது இப்போது கட்டாயமாக்கப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் யாராவது 2 பான்கார்டுகளைப் பெற்றால் அவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்ற உத்தரவு நடைமுறையில் இருக்கிறது. ஆகவே உங்களிடம் ஒன்றுக்கு அதிகமான பான்கார்டு இருப்பின் ரூபாய்.10,000 அபராதம் விதிக்கப்படலாம். ஆனால் இந்த அபராதத்திலிருந்து விடுப்பட உங்களிடம் உள்ள 2 பான்கார்டுகளில் ஒன்றை உடனே செயல் இழக்க செய்துவிடுவது சட்ட நடவடிக்கையில் சிக்காமல் தப்பிப்பதற்காக முக்கிய வழி ஆகும்.
ஒன்றுக்கு அதிகமான பான்கார்டு இருப்பின் எவ்வாறு ஒப்படைப்பது?
# முதலாவதாக வருமான வரித் துறை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதற்கென இணையதளத்திலுள்ள “Request For New PAN Card Or/ And Changes Or Correction in PAN Data” என்ற லிங்கை கிளிக்செய்து படிவத்தை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
# அதன்பின் படிவத்தைப் பூர்த்திசெய்து NSDL அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். 2வது பான்கார்டை சமர்ப்பிக்கும்போது, அதனை படிவத்துடன் சமர்ப்பிக்கவும். மற்றொரு புறம் இச்செயல் முறையை நீங்கள் ஆன்லைனிலும் செய்யலாம்.
# அதேபோன்று டிமேட் மற்றும் வருமானவரிக்கு தனித் தனி பான் வைத்து இருந்தால், ஒரு பான்கார்டை நீங்கள் வருமான வரித்துறையிடம் சமர்ப்பிக்கவும். 2வது பான்கார்டை சமர்ப்பித்த பிறகு அசல்பான் தகவலை வருமானவரித் துறைக்கு அனுப்பவும்.
# முன்பே வாங்கிய அட்டையில் ஏதேனும் மாற்றம் செய்யவேண்டும் ஏனில் 2 பாஸ்போர்ட் அளவு வண்ண புகைப்படங்கள், பிறந்ததேதி மற்றும் முகவரி கொண்ட ஐடி, பழைய பான்கார்டின் நகல் மற்றும் கட்டணம் போன்றவற்றை கொண்டு விண்ணப்பிக்கவும். புது திருத்தும் செய்யப்பட்ட அட்டையைப் பெறுவதற்கு சுமார் 10-15 நாட்கள் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.