Categories
பல்சுவை

2 பான் கார்டு இருக்கா…? உடனே இதைப் பண்ணலனா ரூ.10,000 அபராதம்… எப்படி செய்வது… முழு விவரம் இதோ..!!!

ஒருவர் இரண்டு பான் கார்டு வைத்திருந்தால் அதில் ஒன்றை எப்படி சரண்டர் செய்வது என்பதை பற்றி தெரிந்து கொள்வோம். அப்படி செய்யவில்லை என்றால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

பான் கார்டு என்பது ஒரு தனிமனிதனின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. பான் கார்டு வைத்திருக்கும் அனைவரும் ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதற்கான கால அவகாசம் வழங்கியுள்ளது. பான் கார்டு மூலமாக ஒருவரின் பரிவர்த்தனைகள் கண்காணிக்கப்படுகிறது. அதிக தொகை கொடுத்து நகை வாங்குவதற்கும், மற்ற பெரிய பரிவர்த்தனைகளுக்கும் பான் கார்டு மிக முக்கியமாகும். ஆனால் ஒன்றுக்கு மேற்பட்ட பான் கார்டு வைத்திருந்தால் அது ஆபத்து.

வருமான வரி சட்டத்தின் படி இது குற்றமாகும். இதற்கு பத்தாயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். எனவே ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட பான் கார்டு வைத்திருந்தால் அதில் ஒன்றை சரண்டர் செய்துவிட வேண்டும். அதற்கு நீங்கள் எங்கும் அலைய வேண்டாம் ஆன்லைனிலேயே சரண்டர் செய்ய முடியும்.

எப்படி செய்வது:

இதற்கு முதலில் வருமான வரித் துறையின் https://www.onlineservices.nsdl.com/paam/endUserRegisterContact.html என்ற முகவரியில் செல்ல வேண்டும். அதில் விண்ணப்ப வகையில் Changes of Correction in Existing PAN Data/Reprint of PAN Card என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும். புதிய படிவம் ஒன்று வரும். அதில் உங்களது பெயர், பிறத தேதி, முகவரி, மொபைல் நம்பர் போன்ற விவரங்களைப் பதிவிட வேண்டும்.

நீங்கள் சரண்டர் செய்ய விரும்பும் பான் கார்டு விவரத்தையும் குறிப்பிட வேண்டும். அந்தப் படிவத்தை submit செய்தவுடன் உங்களுக்கு ஒரு டோக்கன் நம்பர் வழங்கப்படும். அடுத்த பக்கத்தில் நீங்கள் சரண்டர் செய்யும் பான் கார்டின் ஸ்கேன் காப்பியைப் பதிவேற்றம் செய்ய வேண்டும். இப்போது உங்களது பயன்பாடு சரண்டர் செய்யப்பட்டுவிடும்.

Categories

Tech |