அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடனும், பிரதமர் மோடியும் இன்று காணொலி காட்சி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.
இந்தியா, அமெரிக்கா இடையேயான ‘2 பிளஸ் 2’ பேச்சுவார்த்தை இன்று அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் நடைபெறுகிறது. மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் மற்றும் ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் போன்ற இருவரும் அமெரிக்க வெளியுறவு மந்திரி ஆண்டனி பிளின்கன், ராணுவ மந்திரி லாயிட் ஆஸ்டின் போன்றோருடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள்.
இந்த நிலையில் இரு நாடுகளுக்கு இடையேயான ‘2 பிளஸ்2’ பேச்சுவார்த்தைக்கு மத்தியில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் பிரதமர் மோடி இருவரும் இன்று காணொலிக் காட்சி வாயிலாக பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள். இந்த பேச்சுவார்த்தை குறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜென் சாகி கூறியபோது, நமது அரசாங்கங்கள், பொருளாதாரங்கள் மற்றும் மக்களுக்கு இடையேயான உறவுகளை மேலும் ஆழப்படுத்துவதற்காக, ஜனாதிபதி ஜோ பைடன், இன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடியை காணொலி காட்சி வழியாக சந்திக்க இருக்கிறார்.