பிள்ளைகளை கொன்று தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
ஸ்விட்சர்லாந்தை சேர்ந்த கணவன் மனைவி இருவர் அவர்களிடையே ஏற்பட்ட தகராறினால் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதனால் மனைவி இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை குழந்தைகளை அவர்களின் தந்தையுடன் அனுப்புவது வழக்கம். அவ்வகையில் கடந்த ஞாயிறு குழந்தைகளை அவர்களது தந்தையுடன் அனுப்பியுள்ளார். பொதுவாக ஐந்து மணிக்கெல்லாம் குழந்தைகள் வீட்டிற்கு திரும்பி விடும் நிலையில் சம்பவத்தன்று வெகுநேரமாகியும் பிள்ளைகள் வீட்டிற்கு திரும்பவில்லை.
இந்நிலையில் அந்த தாயிடம் காவல்துறையினர் துர்காவ் மண்டலத்தில் அவரது கணவர் மற்றும் இரண்டு குழந்தைகள் சடலமாக மீட்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் அவர்கள் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் குழந்தைகளை கொலை செய்துவிட்டு தந்தை தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்துள்ளனர். ஆனால் பிரேத பரிசோதனை முடிவுகள் வந்த பின்னரே உறுதியான தகவல்கள் வெளிவரும் எனவும் கூறியுள்ளனர்.