Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

2 பெண்களை திருமணம் செய்த வனக்காவலர்….. 7 பேர் மீது வழக்குப்பதிவு…. பெரும் பரபரப்பு…!!!

2 பெண்களை திருமணம் செய்த வனக்காவலர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தம்மம்பட்டி பகுதியில் ஞானப்பிரகாசம் என்பவர் வசித்து வருகிறார். இவர் திருமானூர் பகுதியில் வனக்காவலராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் கீரனூர் பகுதியைச் சேர்ந்த சுஜாதா என்பவருக்கும் கடந்த 6 வருடங்களுக்கு முன்பாக திருமணம் நடந்தது. இந்நிலையில் ஞானப்பிரகாசம் தம்மம்பட்டி பகுதியை சேர்ந்த ஜனனி என்ற பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார்.

இதைப் பற்றி அறிந்த முதல் மனைவி சுஜாதா காவல்துறையில் ஞானப்பிரகாசம் மீது புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்படி ஞானப்பிரகாசம், இவருடைய தந்தை கதிரேசன், ஜனனி உள்ளிட்ட 7 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் காவல்துறையினர் ஞானப்பிரகாசத்தை  கைது செய்து அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Categories

Tech |