Categories
உலக செய்திகள்

2 பெண்கள் மீது பாலியல் தாக்குதல்… வெளியான சிசிடிவி காட்சிகள்… போலீசார் விசாரணை….!!

கனடாவில் இருதினங்களில் 2 பெண்கள் மீது பாலியல் தாக்குதல் நடத்திய மர்ம நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

கனடாவின் டொராண்டோ நகரில் இருவேறு தினங்களில் இரண்டு பெண்கள் மீது பாலியல் தாக்குதல் செய்துவிட்டு தப்பி ஓடிய மர்ம நபர் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது. டொரன்டோ நகரில் உள்ள கார்ல்டன் பகுதியில் 29 வயதான பெண் ஒருவர் இரவு 9.15 மணியளவில் மளிகை கடைக்கு சென்று விட்டு வீடு திரும்பும் பொழுது அவரை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர் ஒருவர் அந்தப் பெண் மீது பாலியல் தாக்குதல் நடத்தி விட்டு தப்பி ஓடியுள்ளார்.

இதனை அடுத்து இரண்டாவதாக கடந்த 19ஆம் தேதி இசபெல்லா பகுதியில் 56 வயதான பெண் ஒருவர் இரவு 9.40 மணி அளவில் தனது நாயுடன் நடந்து சென்று இருக்கும் பொழுது அவரின் பின்னால் இருந்து வந்த மர்ம நபர் அவர் மீது பாலியல் தாக்குதல் நடத்தி விட்டு தப்பி ஓடியுள்ளார். இந்த இரு சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளை போலீசார் பார்த்தபோது இரண்டு சம்பவங்களிலும் ஈடுபட்ட மர்ம நபர் ஒருவர் தான் என தெரியவந்துள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் குற்றவாளியை பிடிக்கும் வகையில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |