மத்திய சிவில் பென்சன் மற்றும் ஓய்வூதியதாரர்கள் தனித்தனியாக இரண்டு பென்ஷன் பெற முடியுமா எனும் சந்தேகம் தொடர்ந்து நீடித்துக் கொண்டே வருகிறது. இந்த நிலையில் இதுபற்றி மத்திய பென்சன் மற்றும் பென்சனர் நலத்துறை தெளிவுபடுத்தியிருக்கின்றது. மத்திய சிவில் பென்சன் பெறுவோர் இருவேறு பென்சன்களை தனித்தனியாக பெற்றுக்கொள்ளலாம் என மத்திய அரசு தெளிவுபடுத்தியிருக்கின்றது.
இதுபற்றி பென்ஷன் மற்றும் பென்சனர் நலத்துறை குறிப்பானை வெளியிட்டது. அதில் பென்சன் விதிமுறைகள் பற்றி தெளிவுபடுத்தபட்டிருக்கின்றது. 2012 செப்டம்பர் வரை அமலில் இருந்த விதிமுறைப்படி மத்திய சிவில் பென்சன் பெறுபவர் இரண்டு பென்சன்களை பெற்றுக்கொள்ள முடியாது. இதன்பின் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு இரு வேறு பென்சன்களை மத்திய சிவில் பென்சனர்கள் பெற்றுக் கொள்ளலாம் என மத்திய அரசு அறிவித்திருந்தது. 2021 செப்டம்பர் வரை ஒரே குடும்பத்தில் ஓய்வுபெற்ற மத்திய சிவில் பென்சனரும், மற்றொரு ராணுவ பென்சனரும் இருந்தால் அந்தக் குடும்பத்திற்கு ராணுவ பென்சன் மட்டுமே வழங்கப்படுகிறது.
மேலும் சிவில் பென்ஷன் வழங்கப்படாது. அதேபோல் ஏற்கனவே குடும்ப பென்சன் பெற்று வரும் ஒரு குடும்பம் இன்னொரு குடும்ப பென்சன் பெற முடியாது. இதனையடுத்து இந்த இரண்டு விதிமுறைகளும் 2012 செப்டம்பர் 24 ஆம் தேதி முதல் நீக்கப்பட்டது. இதன்படி ஒரே குடும்பத்தை சேர்ந்த ஓய்வூதியதாரர்கள் இரண்டு குடும்ப பென்சன்களை பெற்று கொள்ளலாம். இந்த விதிமுறைகள் 2012 செப்டம்பர் 24-ஆம் தேதி முதல் அமலில் இருக்கின்றன. இதனை மத்திய அரசு பென்சன் மற்றும் பென்சனர் நலத்துறை தெளிவுபடுத்தியிருக்கின்றது.