ஆஸ்திரேலிய நாட்டில் டி20 உலக கோப்பை கிரிக்கெட் நடைபெற இருக்கிறது. இந்த போட்டிக்கான வீரர்கள் தற்போது நடைபெறும் ஆசிய உலகக் கோப்பை கிரிக்கெட்டை பொறுத்து தேர்வு செய்யப்படுவார்கள். இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஆசிய உலகக் கோப்பை கிரிக்கெட்டில் விளையாடும் பெரும்பாலான வீரர்கள் டி20 உலக கோப்பை போட்டிக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என்பதால் வீரர்கள் தங்களால் முடிந்த அளவுக்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். இதனையடுத்து ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் நடைபெற்று முடிந்த பாகிஸ்தான் மற்றும் ஹாங்காங் அணிகளுக்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் விளையாடும் இந்திய வீரர்கள் அனைவருமே உன்னிப்பாக கவனிக்கப்படுகிறார்கள்.
அதோடு காயம் காரணமாக போட்டியிலிருந்து விலகி இருந்த கே.எல் ராகுலும் தற்போது விளையாட ஆரம்பித்துள்ளார். அதன் பிறகு நீண்ட நாட்களாகவே பார்மில் இல்லாத விராட் கோலி தற்போது ஓரளவு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இவர்கள் டி20 உலக கோப்பைக்கு தேர்வு செய்யப்படுவார்களா என்பது குறித்து முன்னாள் தேர்வுகுழு உறுப்பினர் சபா கரீம் தன்னுடைய கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். அவர் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி நீண்ட நாட்களாக பார்மில் இல்லை. ஆனால் தற்போது நடைபெறும் ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தான் மற்றும் ஹாங்காங் அணிகளுக்கு எதிராக தன்னால் முடிந்த அளவுக்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இனி வரும் போட்டிகளில் விராட் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி டி20 போட்டிக்கு தயாராகி விடுவார். இதேபோன்று கே.எஸ் ராகுல் கடந்த ஒரு வருடமாகவே காயத்தால் அவதிப்பட்டு வந்தார். இவர் தற்போது தான் காயத்திலிருந்து மீண்டு விளையாட ஆரம்பித்துள்ளார். இதனால் கே.எல் ராகுலுக்கு சற்று டைம் கொடுக்க வேண்டும். மேலும் விராட் கோலி மற்றும் கே.எல் ராகுல் ஆகியோருக்கு இன்னும் டைம் கொடுத்தால் கண்டிப்பாக டி20 உலக கோப்பை போட்டியில் விளையாடுவதற்கு தயாராகி விடுவார்கள் என்று கூறியுள்ளார்.