Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

2 பைக்குகள்… 270 கிலோ எடை… தோளில் சுமந்து சென்ற இரும்பு மனிதன்… 42 கிலோமீட்டர் நடந்து சாதனை..!!

இரண்டு மோட்டார் சைக்கிள்களை தோளில் சுமந்தபடி உலக சாதனைக்காக, நடந்து சென்ற குமரி இரும்பு மனிதருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த கண்ணன் என்பவர் இரும்பு மனிதர் என்ற பட்டம் பெற்றவர். இவர் 9 டன் எடையுள்ள லாரியை கயிற்றால் இழுத்து உலக சாதனை பெற்றுள்ளார். இதன் காரணமாக அவருக்கு சோழன் புக் ஆஃ ரெக்கார்டு என்னும் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. இன்று சுமார் 270 கிலோ எடையுள்ள 2 மோட்டார் சைக்கிளை தனது தோளில் சுமந்தபடி 42 கிலோமீட்டர் நடந்துள்ளார்.

ஏற்கனவே 30 மீட்டர் தூரம் சாதனையை முறியடித்து 42 மீட்டர் தூரத்திற்கு சைக்கிளை சுமந்து சென்றுள்ளார், இந்த சாதனை சோழன் புக் ஆஃ ரெக்கார்டு புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. உலக சாதனை நிகழ்த்துவதற்காக தேவையான அனைத்து ஏற்பாடுகளையும், பயிற்சிகளையும் தமிழக அரசு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

Categories

Tech |