Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

2 பைக் மோதி விபத்து… “டிராவல்ஸ் உரிமையாளர் பரிதாப பலி”.… சோகத்தில் குடும்பத்தினர்…!!

ஈரோட்டில் மோட்டார் வாகனம் மோதிய விபத்தில் டிராவல்ஸ் உரிமையாளர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் பழைய பாளையம் கணபதி நகர் பகுதியில் டிராவல்ஸ் உரிமையாளரான  சுரேஷ்குமார்(40) என்பவர் வசித்து வந்தார். இவர்  மனைவி கலைவாணி. இந்நிலையில் நேற்று முன்தினம் வேலை சம்பந்தமாக சுரேஷ்குமார் மோட்டார் வாகனத்தில் வெளியே சென்றுள்ளார். பின் இரவில் வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருக்கும் போது ஈரோடு பெருந்துறை ரோட்டில் செங்கோடம் பாளையம் பகுதியில் வந்தபோது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராதவிதமாக இவருடைய மோட்டார் வாகனத்தின் மீது மோதியது.

இதில் நிலைதடுமாறிய சுரேஷ்குமார் மோட்டார் வாகனத்தில் இருந்து கீழே விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடினார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் சுரேஷ் குமாரை மீட்டு ஈரோடு பெருந்துறை ரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை சுரேஷ்குமார் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |