Categories
மாநில செய்திகள்

+2 பொதுத்தேர்வில் மாற்றங்கள்…. முதல்வர் அறிக்கைக்கு பின் வெளியாகும் – பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருவதன் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இதில் 1 முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் தேர்வு தேர்வு எழுதாமலேயே ஆல்பாஸ் செய்யப்பட்டது. ஆனால் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் கட்டாயம் கொரோனா கட்டுக்குள் வந்தபிறகு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

ஆனால் கொரோனா அதிகரிப்பினால் மாணவர்களின் நலன் கருதி பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் வீட்டிலிருந்தபடியே பொதுத்தேர்வுக்கு மாணவர்கள் தயாராகும் படியும், அதற்கு ஆசிரியர்கள் வழிகாட்டும் படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பிளஸ்டூ மாணவர்களை பொதுத் தேர்வுக்கு தயார் செய்யும் விதமாக வாட்ஸ் அப் மூலம் அலகுத் தேர்வு நடத்த அறிவுறுத்தப்பட்டு, அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாற்றங்கள் செய்வது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. அவருடைய ஒப்புதலுக்கு பிறகு என்னென்ன மாற்றங்கள் என வெளியிடப்படும் என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |