கொரோனா அதிகமாக பரவி வந்ததன் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு தேர்வு நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக CBSE, CISCE பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை மத்திய அரசால் ரத்து செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து பல்வேறு மாநிலங்களும் பொதுத்தேர்வை ரத்து செய்து வருகின்றன.
இந்நிலையில் தமிழகத்திலும் +2 பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டுமென சில அரசியல் கட்சியினர் கூறி வருகின்றனர். இதனால் பொது தேர்வு நடத்துவது குறித்து அரசியல் கட்சியினர், பெற்றோர்கள், கல்வியாளர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் இடையே கருத்து கேட்பு நடத்தியதில் 60 சதவீதம் பேர் கட்டாயம் தேர்வை நடத்த வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளனர்.
இந்த கருத்துக்கள் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சமர்ப்பித்தார். இதனால் விரைவில் +2 தேர்வு குறித்த முடிவு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.