கேரள மாநிலம் ஆலப்புழை அருகேயுள்ள கிழக்கே புரி பகுதியில் சசிதரன்-பிரசன்னா என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்களுக்கு சசிகலா (34), மீனு (31) என்ற 2 மகள்கள் இருந்தனர். இவர்களுக்கு திருமணம் ஆகவில்லை. கடந்த சில மாதங்களாகவே சசிதரன் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்தநிலையில் கணவரின் சிகிச்சைக்கும், குடும்பத்தை நடத்துவதற்கும் பிரசன்னா கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் கடனை கொடுத்தவர்கள் அந்த பணத்தை திருப்பி கேட்டு தொல்லை செய்துள்ளனர். இந்த நிலையில் நேற்று காலை பிரசன்னா தற்கொலை செய்து கொள்ள முடிவு எடுத்துள்ளார்.
இதையடுத்து அவர் தனது உடலில் பெட்ரோல் மற்றும் மண்எண்ணெயை ஊற்றியதோடு மகள்களான மீனு, சசிகலா மீதும் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். இதன் காரணமாக அவர்கள் 3 பேரும் அலறி துடித்தனர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் 3 பேரையும் மீட்டனர்.
இருப்பினும் 3 பேரும் பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். இது தொடர்ப்பாக தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 3 பேரின் சடலத்தையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.