மனைவி வேறு ஒரு நபருடன் சென்றதால் லாரி டிரைவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள கிணத்துக்கடவு பகுதியில் லாரி டிரைவரான மணிகண்டன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு பத்மாவதி என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு 2 மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் பத்மாவதிக்கு அதே பகுதியில் வசிக்கும் பார்த்திபன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறி விட்டது. இது குறித்து அறிந்த மணிகண்டன் தனது மனைவியை கண்டித்துள்ளார். ஆனால் அதனை பொருட்படுத்தாத பத்மாவதி பார்த்திபனுடன் சென்றுவிட்டதால் மணிகண்டன் மன உளைச்சலில் இருந்துள்ளார்.
இதனால் தனது மகள்களை மாமியாரான தனலட்சுமி என்பவரது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். அதன் பிறகு இரவு தனது வீட்டிற்கு வந்த மணிகண்டன் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மணிகண்டனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.