தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி சற்றுமுன் தொடங்கியது. தமிழகம் முழுவதும் சுமார் 75 மையங்களில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முன்னனி நிலவரங்கள் பிற்பகலுக்குள், வெற்றி நிலவரங்கள் மாலைக்குள் தெரியவரும். ஒவ்வொரு தொகுதிக்கும் நான்கு முதல் ஐந்து சுற்று வரை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
இந்நிலையில் வாக்கு எண்ணப்படும் வாக்குச்சாவடி மையங்களில் ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் ஒரு முறை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். மேலும் பாதுகாப்பு பணியில் துணை ராணுவம், தமிழ்நாடு சிறப்பு காவல் படை என சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.