Categories
தேசிய செய்திகள்

2 மணி நேரமாக WhatsApp முடக்கம்: காரணம் என்ன….? மெட்டாவுக்கு செக்…!!!

வாட்ஸ்அப் சேவை முடக்கம் தொடர்பாக விளக்கமளிக்க மெட்டா நிறுவனத்துக்கு மத்திய தொழில்நுட்பத் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 25ஆம் தேதி அன்று whatsapp செயலி ஆனது 2 மணி நேரமாக முற்றிலும் முடங்கியது. இந்த பிரச்சனை இந்தியா முழுவதும் நீடித்திருந்தது. அதன்பின்னர் இரண்டு மணி நேரத்திற்கு பிறகு மீண்டும் செயல்பட தொடங்கியது. குறிப்பாக வாட்ஸ் அப்பில் பயன்படுத்தப்படக்கூடிய பயனர்கள் நாடு முழுவதும் அதிக அளவில் இருந்து whatsapp செயலி மூலமாக தான் தங்களுடைய மெசேஜ்களை பரிமாறிக் கொண்டிருக்கும் நிலையில் இரண்டு மணி நேரம் whatsapp செயல் படாத காரணத்தினால் பெரும் அவதி அடைந்தனர்.

இதற்கான காரணம் என்பது குறித்து வாட்ஸ் அப் நிறுவனம் வெளியிடவில்லை இந்த நிலையில் இது தொடர்பான காரணத்தை விளக்கி விரிவான அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு மெட்டா இந்தியா நிறுவனத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Categories

Tech |