Categories
சேலம் மாவட்ட செய்திகள்

2 மணி நேரம் தாமதமாக புறப்பட்ட பெங்களூரு-காரைக்கால் ரயில்…. சிரமப்பட்ட பயணிகள்….!!!

பெங்களூரில் இருந்து காரைக்காலுக்கு தினமும் பயணிகள் ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் சேலம், ஆத்தூர் வழியாக செல்கிறது. வழக்கமாக மதியம் 2:30 மணிக்கு ரயில் ஆத்தூரில் இருந்து புறப்பட்டு காரைக்காலுக்கு செல்லும். நேற்று தலைவாசல்- சின்னசேலம் இடையே ரயில்வே இருப்பு பாதையில் மின்சார கம்பிகளை சரி செய்யும் எந்திரம் எதிர்பாராதவிதமாக பழுதாகி நின்றது.

இதனால் சேலத்தில் இருந்து மாற்று இன்ஜினை கொண்டு வந்தனர். அதன் மூலம் இருப்பு பாதையை சீரமைக்கும் இயந்திரம் இழுத்து செல்லப்பட்டுள்ளது. இதனால் மதியம் 2:30 மணிக்கு புறப்பட வேண்டிய பெங்களூரு- காரைக்கால் ரயில் 2 மணி நேரம் தாமதமாக மாலை 4:30 மணிக்கு புறப்பட்டு சென்றது. 2 மணி நேரம் ரயில் தாமதமானதால் பயணிகள் மிகவும் சிரமப்பட்டுள்ளனர்.

Categories

Tech |