தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் அருகே நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல அலுவலகம் அமைந்துள்ளது. இங்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று மாலை அதிரடியாக 2 மணி நேரம் சோதனை நடத்தினர். அப்போது கணக்கில் வராத 15 ஆயிரத்து 500 ரூபாய் பணத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.
இதனை அடுத்து அந்த பணம் இங்கு எப்படி வந்தது? யாரிடமாவது இருந்து லஞ்சமாக பெறப்பட்டதா? என்பது குறித்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்களிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் துருவி துருவி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.