ஐசிஎம்ஆர் மற்றும் ஆர்எம்ஆர்சி நிறுவனங்கள் இணைந்து கொரோனா ஒமைக்ரான் தொற்றை இரண்டு மணி நேரத்தில் உறுதிப்படுத்தும் கருவியை கண்டறிந்துள்ளனர். ஆர்டிபிசிஆர் கருவியுடன் இணைந்ததாக இது இருக்கும். வழக்கமாக மரபணு பரிசோதனை மூலம் கண்டறிய 36 மணி நேரம் அல்லது நான்கு முதல் ஐந்து நாட்கள் கூட ஆகலாம். கொரோனா வைரஸின் ஸ்பைக் அடிப்படையில் இந்த சோதனையில் ஒமைக்ரான் தொற்று கண்டறியப்படும். ஒமிக்ரான் கொரோனா தொற்றினை உறுதி செய்வதற்கான உபகரணத்தை இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் குழுமத்தின் விஞ்ஞானி டாக்டர் பிஸ்வஜோதி போர்ககோட்யா உருவாக்கியுள்ளார்.
Categories