Categories
மாநில செய்திகள்

2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும்…. தமிழக அரசு புதிய கட்டுப்பாடு….!!!!

தமிழகத்தில் வருகின்ற அக்டோபர் 24ஆம் தேதி திங்கட்கிழமை என்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.பொதுமக்கள் தங்களது சொந்த ஊருக்கு திரும்பி புத்தாடை உடைத்து பட்டாசுகள் வெடித்து இனிப்புகளை பகிர்ந்து கொண்டாட ஏதுவாக வெளியூர் பயணிகள் தங்கள் சொந்த ஊரு திரும்ப ஏதுவாக சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.

இந்நிலையில் பட்டாசுகள் வெடிக்க கடந்த சில வருடங்களாக தொடர்ச்சியாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வரும் நிலையில் இந்த வருடம் தீபாவளி என்று காலை 6 மணி முதல் ஏழு மணி வரையும் மாலை 7 மணி முதல் எட்டு மணி வரையும் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |