நாடு முழுவதும் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது. இதனால் பன்னிரண்டாம் வகுப்பு தவிர மற்ற வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு ஆன்லைன் மூலமாக வகுப்பு நடத்தப்படுகிறது. தேர்வும் ஆன்லைன் மூலமாக நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். இதையடுத்து செய்முறை தேர்வு நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டது.
இந்நிலையில் செய்முறை தேர்வு அல்லாத பிரிவை சேர்ந்த +2 மாணவர்களுக்கு இன்று முதல் தேர்வுக்கு முந்தைய விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. செய்முறை தேர்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வு முடிந்த அடுத்த நாள் முதல் நுழைவுத் தேர்வுக்கு முந்தைய விடுமுறை விடப்படுகிறது. அனைத்து மாணவர்களும் தேர்வுகூட நுழைவு சீட்டு வழங்கும் நாளன்று அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.