கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு CBSE மற்றும் CISCE தேர்வுகள் மத்திய அரசால் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து பல்வேறு மாநிலங்களிலும் பிளஸ் 2 தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. இதனை தொடர்ந்து தமிழகத்திலும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்து நேற்று முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டார்.
இந்நிலையில் பிளஸ் டூ மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்குவது குறித்து குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலர், உயர்கல்வித் துறை செயலர், சென்னை பல்கலைக்கழகத் துணைவேந்தர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். ஒரே ஒரு திருப்புதல் தேர்வு, செய்முறைத்தேர்வு நடந்து முடிந்த நிலையில் வருகை பதிவேடு, பருவத் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்க இருப்பதாக கூறப்படுகிறது.